ADDED : ஜூலை 26, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்தன் தட்டாஞ்சாவடி தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
தட்டாஞ்சாவடி தொகுதியில், முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் ஒரு பகுதியாக முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்தன் தலைமை தாங்கி, சுய தொழில் செய்பவர்களுக்கு, தள்ளுவண்டிகள் வழங்கினார். தொடர்ந்து, மாணவர்கள் கல்வி விழா, இளைஞர் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
