/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தந்தை திட்டியதால் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுவன் மீட்பு
/
தந்தை திட்டியதால் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுவன் மீட்பு
தந்தை திட்டியதால் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுவன் மீட்பு
தந்தை திட்டியதால் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுவன் மீட்பு
ADDED : ஏப் 30, 2024 05:23 AM
அரியாங்குப்பம்: புதுச்சேரி வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் கணேஷ், 12; இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகின்றார். சிறுவனின் தந்தை நேற்று காலை கோபத்தில் அவரை திட்டியுள்ளார். அதில், கோபடைந்த சிறுவன் மயிலாடுதுறையில் உள்ள தனது மாமா வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி, வீட்டில் இருந்து வெளியேறிய சிறுவன் நேற்று மாலை 4:00 மணியளவில் மரப்பாலத்தில் பஸ் ஏறி சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கினார். பின் மயிலாடுதுறை செல்வதற்கு பணம் இல்லாததால், பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது சிறுவனை பார்த்து சந்தேகமடைந்த சமூக ஆர்வவலர், ஒருவர், சிறுவனிடம் பேசி ,அவரது பெற்றோரின் மொபைல் எண்ணை வாங்கி அவர்களிடம் பேசியுள்ளார்.இதைத்தொடர்ந்து சிறுவனின் தாய், முதலியார்பேட்டை போலீசில் இது பற்றிய விபரத்தை தெரிவித்தார்.
சிதம்பரத்தில் இருந்த சிறுவனை மீட்க இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் உடனடியாக காரில் விரைந்து சென்று சிதம்பரத்தில் இருந்த சிறுவனை மீட்டு அழைத்து வந்து, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

