மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 44 புகார் மனுக்கள் மீது தீர்வு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 44 புகார் மனுக்கள் மீது தீர்வு
ADDED : ஆக 01, 2026 06:02 PM
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களின் நடந்த மக்கள் மன்றத்தில், 44 புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.
வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்த மக்கள் மன்றத்தில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொதுமக்கள் கொடுத்து புகார் மனு மீது விசாரணை நடத்தினார். அதே போன்று பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ராகவ், புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில், திவ்யா பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் வம்சீதர ரெட்டி, எஸ்.பி., பாகூரில் ஜிந்தா கோதண்டராமன், எஸ்.பி., காரைக்காலில் வினய் குமார் கட்ஜி எஸ்.பி., மாகியில் தனசேகரன் எஸ்.பி., ஏனாமில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்களை விசாரணை செய்தனர்.
இதில், பொதுமக்களிடம் இருந்து 71 புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 44 புகார் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
