/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடைக்கு பதில் ரெஸ்டோ பார்கள்; மா.கம்யூ., ராமக்கிருஷ்ணன் குற்றச்சாட்டு

ADDED : மார் 27, 2024 07:10 AM

புதுச்சேரி : 'புதுச்சேரியில் தெருவுக்கு தெரு ரெஸ்டோ பார்களை திறந்துள்ளனர்' என, மா.கம்யூ., கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமக்கிருஷ்ணன் அரசு மீது குற்றம்சாட்டிள்ளார்.
அவர் நேற்று அளித்த பேட்டி:
மத்தியில் பா.ஜ., ஆட்சி, புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணி ஆட்சி என இரட்டை என்ஜின் ஆட்சி நடக்கிறது. ஆனால், மக்கள் நலன் பாதுகாக்கப்படவில்லை. மக்களின் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடையை திறப்போம் என்றனர். ஆனால், ரேஷன் கடையை திறக்கவில்லை. மாறாக, தெருவுக்கு நான்கு ரெஸ்டோ பார்களை திறந்துள்ளனர். மத்தியில் பா.ஜ., அரசும், மாநிலத்தில் என்ஆர் காங்., பா.ஜ., கூட்டணியும் படுதோல்வி அடைந்துள்ளது.பா.ஜ., ஆட்சி செய்யாத மாநில அரசுகளை கவிழ்ப்பது, நிர்வாகத்தை சீர்குலைக்கும் வேலைகளை கவர்னர் மூலம் பா.ஜ., செய்கிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரு சீட் கூட பா.ஜ., வெற்றி பெற முடியாது' என்றார்.
மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.