/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
/
ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
ADDED : மார் 04, 2025 09:50 PM

புதுச்சேரி : ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியர்கள் சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் 7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு, நோயாளிகள் கவனிப்பு படி உயர்த்தி, கடந்த 1.7.2017ம் தேதி முன்தேதியிட்டு கடந்த 18.9.2019ம் தேதி ஆணையிட்டது.
புதுச்சேரி அரசு இதனை வழங்காமல், கடந்த 6 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி கடந்த 1.6.2023ம் தேதியில் இருந்து, கவனிப்பு படி வழங்க ஆணை பிறப்பித்தது.
இதனால் சுகாதாரத்துறையில், ஓய்வு பெற்ற கடை நிலை ஊழியர்களுக்கு அந்த தொகை கிடைக்காமல் ஓய்வு பெற்றனர்.
6 ஆண்டு காலத்திற்கு வழங்க வேண்டிய நோயாளி கவனிப்பு படி நிலுவைத்தொகையை ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்க கோரியும், சுகாதாரத்துறையின் மெத்தன போக்கை கண்டித்து, ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர்கள் நேற்று பிச்சை எடுக்கும் போராராட்டம் நடத்தினர்.
இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை எதிரில் நடந்த இந்த போராட்டத்திற்கு புதுச்சேரி சுகாதார ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க தலைவர் வெற்றிவேல், பொதுச்செயலாளர் பக்தவச்சலம், பொருளாளர் மோசஸ் புஷ்பராஜ் தலைமை தாங்கினர். சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.