ADDED : ஜூலை 07, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
கடலுார்: ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து இறந்தார்.
புதுச்சேரி, முதலியார்பேட்டையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், 68; புதுச்சேரி அரசு கல்வித்துறையில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், கடலுார், பெரியகாட்டுபாளையத்தில் உள்ள தனது நிலத்திற்கு நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வந்தார். அப்போது, திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடன், அருகில் இருந்த குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஆரோக்கியராஜ் இறந்து விட்டதாக கூறினார். புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
