/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்வி உரிமை சட்டம் அ.தி.மு.க., கோரிக்கை
/
கல்வி உரிமை சட்டம் அ.தி.மு.க., கோரிக்கை
ADDED : ஏப் 24, 2024 11:03 PM
புதுச்சேரி: 'புதுச்சேரியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏழை மாணவர்களும் தரமான தனியார் பள்ளியில் கல்வி பயில, கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. புதுச்சேரியை தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் கட்டாய கல்வி உரிமை சட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த சட்டத்தை அமல்படுத்தினால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்கள் பயன்பெறுவர்.
கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கல்வியாண்டில் புதுச்சேரியில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

