/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மந்த கதியில் சாலை, வாய்க்கால் பணிகள்: பொதுமக்கள் கடும் அவதி
/
மந்த கதியில் சாலை, வாய்க்கால் பணிகள்: பொதுமக்கள் கடும் அவதி
மந்த கதியில் சாலை, வாய்க்கால் பணிகள்: பொதுமக்கள் கடும் அவதி
மந்த கதியில் சாலை, வாய்க்கால் பணிகள்: பொதுமக்கள் கடும் அவதி
ADDED : மே 20, 2024 04:09 AM

புதுச்சேரி, : முதலியார்பேட்டை பட்டாம்மாள் நகர் பகுதியில் சாலை,வாய்க்கால் மேம்பாட்டு பணிகள் மந்தகதியில் நடப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் பிரதான சாலை,ரோடியார் மில் சாலை பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாலை சீரமைப்பு, வாய்க்கால் மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பட்டம்மாள் நகரில் 5வது குறுக்கு வீதிகள்,ஆதிபராசக்தி நகர் மொட்டைய படையாட்சி வீதி,கருமார வீதி,சாமிநாதப்பிள்ளை வீதி,போலீஸ் வீதி ஆகிய பகுதிகளில் மந்த கதியில் பணிகள் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,பட்டம்மாள் நகர் சாலை இரண்டு அடிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு பல மாதம் உருண்டோடி விட்டது. ஆனால் இன்னும் பணிகள் முழுமை பெறாமல் பள்ளத்தாக்கு போல் காணப்படுகின்றது.
மேலும் இணைப்பு சாலைகளையும் கடந்த மூன்று நாட்களுக்கு முன் துண்டித்து விட்டனர்.இதனால் நகரை விட்டு வெளியே செல்ல முடியவில்லை.
பள்ளி,கல்லுாரி,அலுவலகம் செல்ல முடியவில்லை. பைக்கில் செல்லும்போதும் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த சாலை, வாய்க்கால், பணிகளை விரைந்து முடிக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

