தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நள்ளிரவில் சாலை மறியல் 

நள்ளிரவில் சாலை மறியல் 

நள்ளிரவில் சாலை மறியல் 


ADDED : ஜூன் 14, 2024 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2024 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தவளக்குப்பத்தில் இரு வாலிபர்கள் மோதல் காரணமாக உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியைச் சேர்ந்த இரு வாலிபர்கள் அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நடந்த சம்பவத்தை வீட்டில் கூறினர்.

இருவரும் மாறி மாறி புகார் கொடுக்க சென்றனர். போலீசார் புகார் எடுக்க மறுக்கவே, இரு தரப்பு உறவினர்கள் புதுச்சேரி - கடலுார் சாலை, தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நள்ளிரவு 12:00 மணியளவில் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர். தவளக்குப்பம் போலீசார் இரு தரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us