ADDED : மார் 23, 2024 06:19 AM

புதுச்சேரி : வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடந்தது.
ஆச்சார்யா கல்விக் குழும நிர்வாக இயக்குனர் அரவிந்தன் வழிகாட்டுதலின்படி, நடந்த வகுப்பில் கல்லுாரி முதல்வர் குருலிங்கம் தலைமை தாங்கினார். போக்குவரத்து வட்டார அதிகாரி சீத்தாரமா ராஜூ, சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பேசினார். சீனிவாசன் ரவிசங்கர் மாணவர்களுக்கு குறும்படங்கள் காண்பித்து ஓட்டுனர்களின் தவறு குறித்து விளக்கினார்.
சிறப்பு விருந்தினராக போக்குவரத்து ஆணையர் சிவக்குமார். போக்குவரத்து வட்டார அலுவலர் கலியபெருமாள் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து பேசினர். கணினி அறிவியல் துறைத் தலைவர் கண்ணகி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வி துறை தலைவர் குமரேசன், துணை உடற்கல்வி இயக்குனர் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

