ADDED : ஜூன் 14, 2026 06:11 PM
புதுச்சேரி: சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து இன்று 11வது நாளாக அகற்றப்படுகிறது.
கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின்படி, புதுச்சேரி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் சாலைகளின் அழகியலை பாதிக்கும் பிற செயல்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகளை அகற்றும் பணி கடந்த 1ம் தேதி துவங்கியது. இப்பணி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், 11வது நாளான இன்று (15ம் தேதி) காமாட்சி அம்மன் கோவில் தெரு– மிஷன் வீதி சந்திப்பு முதல் அண்ணாசாலை வரை, பொதுப்பணித்துறை, புதுச்சேரி நகராட்சி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கிறது. தொடர்ந்து, மூலக்குளம் முதல் பெரம்பை சாலை வரையிலும், உழவர்கரை நகராட்சி மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர்.
