sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல் மருத்துவர்களுக்கு தடுப்பூசி முகாம்

பல் மருத்துவர்களுக்கு தடுப்பூசி முகாம்

பல் மருத்துவர்களுக்கு தடுப்பூசி முகாம்


ADDED : ஜூன் 14, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 06:11 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு மார்புநோய் மருத்துவமனையில் பல் மருத்துவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடந்தது.

புதுச்சேரி சுகாதாரத் துறை, இந்திய பல் மருத்துவ சங்கத்தின் புதுச்சேரி கிளையின் சார்பில், பல் மருத்துவர்களுக்கான ஹெபடைட்டிஸ்-–பி தடுப்பூசி முகாம் அரசு மார்பு நோய் மருத்துவமனையில் நடந்தது.

 சுகாதாரத் துறை இயக்குநர் செவ்வேள், அரசு மார்பு நோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினர். பல் மருத்துவர்கள் தங்கள் பணியின் தன்மையால், பல்வேறு தொற்று நோய்களின் பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயம் அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே, அவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த தடுப்பூசி முகாம் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முகாமில் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் புதுச்சேரி கிளையைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஏற்பாடுகளை இந்திய பல் மருத்துவ சங்கத்தின் புதுச்சேரி கிளைத் தலைவர் செந்தில், செயலாளர் ராம்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us