/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரோபோட்டிக் உதவியுடன் கர்ப்பபை புற்று நோய் அறுவை சிகிச்சை; அப்போலோ புரோட்டான் சென்டரில் துவக்கம்

ADDED : மே 18, 2024 06:14 AM

புதுச்சேரி : கர்ப்பபை புற்று நோய்க்கு ரோபோட்டிக் உதவியுடன் அறுவை சிகிச்சை செயல் திட்டத்தை சென்னை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் தொடங்கியுள்ளது.
சென்னை அப்போலோ புரோட்டோன் கேன்சர் சென்டர் கர்ப்பபை புற்று நோயினை ஹைபர்தெமிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி மூலம் இந்தியாவில் முதல் ரோபோட்டிக் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை கடுமையாக போராடிய நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கவுகாத்தியை சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு உதர மடிப்பில் பிற உறுப்புகளில் இருந்து பரவியிருக்கும் கர்ப்பபை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு புதிய துணை கீமோதெரபியின் மூன்று சுழற்சிகளை பெற்று பின் அவர், புற்றுநோய் சுமை குறைக்கப்பட்டது.
தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு ரோபோட்டிக் உதவியுடன் ஒரு சிக்கலான இடைவெளி சைட்டோரிடெக்டிவ் அறுவை சிகிச்சை செய்த போது, மார்பக புற்று நோய் இருப்பதை கண்டறியப்பட்டு அதற்கும் ரோபோட்டிக் உதவியுடன் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.மூன்று நாட்களில் அந்த நோயாளி வீட்டுக்கு திரும்பினார்.
இதுபற்றி புற்றுநோயியல் சிறப்பு நிபுணர் வெங்கட் கூறுகையில், 'ரோபோட்டிக் தொழில்நுட்பத்தில் செயல்திறன்களை மேம்படுத்தி வருகிறோம். மிக நவீன ரோபோட்டிக் சாதனங்களை கர்ப்பபை புற்றுநோய்க்கு பயன்படுத்தினோம். இது, சிறப்பான துல்லியம் மற்றும் கைவினைத்திறனை வெளிப்படுத்தி செய்துள்ளோம்.
இந்த சிகிச்சை மூலம் ஆரோக்கியமான திசுக்களை அகற்றாமல் தக்க வைத்திருக்கும். அதே வேளையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திசுக்களையும், செல்களையும் அகற்றுவதற்கான திறன் முக்கியமானது' என்றார்.