ADDED : ஆக 27, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி ரோட்டரி சங்கம் மற்றும் அன்னை அறக்கட்டளை சார்பில் வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், புவனகிரி வழியாக வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேனீர், டிபன், மதிய உணவு, குடிநீர், மோர், மாலை தேனீர் மற்றும் இரவு சிற்றுண்டி வழங்கும் பணியை துவங்கினர்.
நேற்று அன்னை அறக்கட்டளை நிர்வாகிகள் செல்வராஜ், விஜய்பிரபு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுதர்சன், விஜய்பிரபு, சரவணபவன், செல்வக்குமார், கலைச்செல்வம் பங்கேற்றனர்.

