ADDED : ஜூன் 15, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பரோலில் வந்த ரவுடி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி கர்ணா. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே கடந்த 3 நாட்கள் முன், கர்ணா தனது மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, பரோலில் வந்தார். அவரின் பரோல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. ஆனால் அவர் காலாப்பட்டு சிறைக்கு நேற்று வரவில்லை.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்றபோது, கர்ணா வீடு பூட்டிக்கிடந்தது. இதையடுத்து கர்ணா தப்பிச்சென்றாரா, என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.