/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ.10.72 லட்சம் மோசடி
/
புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ.10.72 லட்சம் மோசடி
ADDED : ஆக 16, 2024 05:53 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேரிடம் 10.72 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், இவரை தொடர்பு கொண்ட, நபர் வங்கி அதிகாரி என, அறிமுகம் செய்து, கிரெடிட் கார்டு தொகையை உயர்த்துவதற்கு, கார்டின் விபரங்கள் மற்றும் அதற்கான ஓ.டி.பி., எண்ணை கேட்டு பெற்றார். உடன் அவரது கணக்கில் இருந்து, 7.50 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது.
மேலும், காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த ருத்ரகுமார், இவரிடம் பேசிய நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் சம்பதிக்கலாம் என கூறினார். அதை நம்பி, அவர் 1.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். பின், அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் அவர் ஏமாந்தார்.
தொடர்ந்து, பாலாஜி நகரை சேர்ந்தவர் ராம்பிரசாத். இவருக்கு மொபைலில் மர்ம நபர் ஒருவர் பேசி, உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது. அந்த பரிசை பெற முன்பணம் அனுப்ப வேண்டும் என கூறினார். அதை நம்பி, அவர், 1.32 லட்சம் ரூபாய் அனுப்பி மர்ம கும்பலிடம் ஏமாந்தார்.
முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புனிதா, இவர் 40 ஆயிரம் பணத்தை அனுப்பி மர்ம நபரிடம் ஏமாந்தார்.
இதுகுறித்து, 4 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.

