/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 1.5 கோடி மதிப்பில் வடிகால் பணி துவக்கம்
/
ரூ. 1.5 கோடி மதிப்பில் வடிகால் பணி துவக்கம்
ADDED : செப் 13, 2024 06:43 AM

புதுச்சேரி: வில்லியனூரில் ரூ. 1.5 கோடி மதிப்பில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை எதிர்க்கட்சி தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
வில்லியனுார் தொகுதி பெரியபேட் வினித் நகர், மாரியம்மன் கோவில் தெரு முதல் வி.மணவெளி பிரதான சாலை வரை பொதுப் பணித்துறை, நீர்ப்பாசனக் கோட்டம் மூலம் ரூ. 1 கோடியே 54 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் புதியதாக கான்கிரீட் சுவருடன் கூடிய வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா வாய்க்கால் அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட செயற் பொறியாளர் ராதாகிருஷணன், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர், தி.மு.க., தொகுதி செயலாளர் மணிகண்டன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

