/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதித்த நேரத்தை தாண்டி மது விற்பனை 3 பார்களுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்

ADDED : ஏப் 01, 2024 06:35 AM
புதுச்சேரி : கடற்கரையோரம் உள்ள 3 சுற்றுலா பிரிவு மதுபான பார்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விநியோகம் செய்ததால், கலால் துறை ரூ. 1.5 லட்சம் அபராதம் விதித்தது.
புதுச்சேரியில் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து சாராயம், கள், மதுபான கடை, பார், ரெஸ்டோ பார்கள், சுற்றுலா பிரிவு மதுபான கடைகள் அனைத்தும் இரவு 10:00 மணிக்கு மூடப்பட வேண்டும் என தேர்தல் துறை உத்தரவிட்டது. பெரும்பாலான மதுபான கடைகள் இரவு 9:45 மணிக்கே கடைகளை மூடி விடுகின்றனர்.
ஆனால் சுற்றுலா பிரிவின் கீழ் இயங்கும் ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் நள்ளிரவு வரை மது வினியோகம் செய்வதாக கலால் துறைக்கு புகார்கள் வந்தது.
நேற்று முன்தினம் கலால் துறை பறக்கும்படையினர், கடற்கரை சாலை சுப்பையா சாலை சந்திப்பில் உள்ள சுற்றுலா பிரிவு மதுபான பார்களில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, இரவு 10:00 மணியை தாண்டியும் சுற்றுலா பயணிகளுக்கு மதுவிநியோகம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 3 மதுபான பார்களுக்கும் கலால் துறை, தலா ரூ. 50 ஆயிரம் விதம், ரூ. 1.5 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தது.