/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் மூலம் ரூ.1.9 கோடி மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
/
ஆன்லைன் மூலம் ரூ.1.9 கோடி மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆன்லைன் மூலம் ரூ.1.9 கோடி மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆன்லைன் மூலம் ரூ.1.9 கோடி மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 04, 2024 11:49 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைனில் ரூ.1.9 கோடி மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மொபைல் எண்ணை மர்ம நபர்கள், ஒரு போலி வாட்ஸ் அப் குழுவில் இணைத்து, ேஷர் மார்க்கெட்டில், லாபம் வருவது போல், 'டெமோ' காட்டி உள்ளனர்.
இதை நம்பி, தர்மலிங்கம் சிறுக, சிறுக ரூ.1.6 கோடி முதலீடு செய்தார். இதையடுத்து, அவர் முதலீடு செய்த பணம் மற்றும் ேஷர் மார்க்கெட் மூலம் கிடைத்த வருவாய் ஆகியவற்றை எடுக்க முயன்ற போது, அவரது ஆன்லைன் கணக்கு முடக்கப்பட்டிருந்தது.
அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற போது, இணைப்பை துண்டித்து விட்டனர். இதன் பிறகே, அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதேபோல, முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த மதன் என்பவரை, மர்ம நபர் ஒருவர் டெலிகிராமில், தொடர்பு கொண்டு, பகுதி நேர வேலை இருப்பதாக கூறினார்.
இதனால் மதன் ஆன்லைனில், அவர் சொன்ன, 'டாஸ்க்'குகளை விளையாடி முடித்தார்.
அதன் பிறகு மதன் சம்பாதித்த பணத்தை ஆன்லைனில் கணக்கில் இருந்து எடுக்க, பணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர். இதை நம்பி அவர், ரூ.2.55 லட்சம், ஆன்லைனில் செலுத்தினார். இதையடுத்து உடனடியாக, அவர் ஆன்லைன் கணக்கு முடக்கப்பட்டது.
மேலும், லாஸ்பேட்டை, ரேவதி என்பவரின் மொபைல் எண்ணிற்கு வந்த வங்கி லிங்கின் மூலம் உள்ளே, சென்றார். அப்போது அவரின், வங்கியின் நெட் பேங்க்கில் உள்ளே நுழைந்த போது, அவரின் வங்கி கணக்கில் இருந்து, ரூ.50 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது.
மேலும் வேலு என்பவர் ஆன்லைனில், கடன் வாங்கி அந்த கடனை திருப்பி செலுத்தி விட்டார். இருப்பினும், இணையதள மோசடிக்காரர்கள் மீண்டும் பணம் செலுத்த வேண்டும் என அவரது புகைப்படத்தை 'மார்பிங்' செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி உள்ளனர். இதற்கு பயந்து, அவர், ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்தார்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புகார் அளித்தனர். சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.