/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலை வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி
/
வேலை வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 15, 2024 02:17 AM
புதுச்சேரி: புதுச்சேரி சஞ்சீவி நகர், விநாயகர் கோவில் வீதி, மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி அம்பிகா, 42; பொதுப்பணித்துறை டேங்க் ஆபரேட்டராக பணிபுரிகிறார். இவர், அதே பகுதி புதுநகர், வீரப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த மகேந்திரன் மனைவி மலர்விழி, 36; என்பவருக்கு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
இதை நம்பிய மலர்விழி, கடந்த 2020ம் ஆண்டு ரூ. 4.5 லட்சம் பணத்தை அம்பிகாவிடம் கொடுத்தார்.
பணம் பெற்று கொண்ட அம்பிகா, வேலை வாங்கி தராமல் ஏமாற்றினார். கொடுத்த பணத்தை மலர்விழி திருப்பி கேட்டபோது, தராமல் ஏமாற்றி வந்தார்.
இது தொடர்பாக மலர்விழி, கோரிமேடு போலீசில் புகார் அளித்தார்.
அம்பிகா மீது போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.