ADDED : ஏப் 18, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் ஒரு வீட்டில் இருந்து 64 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில், நாளை லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தல் விதி மீறலை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் மூலம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், பல்வேறு இடங்களில், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளால், நேற்று முன்தினம் முதல் நேற்று வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், ஒரு வீட்டில், 64 லட்சம் ரூபாய் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 10 லட்சத்திற்கு மேல் இருந்ததால், பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போது, 4 நபர்கள் கைது, செய்யப்பட்டனர்.
இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.

