/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1.20 லட்சம் போதை பொருள் பறிமுதல்; ஒருவர் கைது
/
ரூ.1.20 லட்சம் போதை பொருள் பறிமுதல்; ஒருவர் கைது
ADDED : செப் 01, 2024 04:02 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முத்தியால்பேட்டை குருசுக்குப்பம் பாப்பம்மாள் கோவில் தெருவில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போதை பொருட்களை விற்பனை செய்த பாப்பம்மாள் கோவில் தெருவை சேர்ந்த ரஜத் குமார் திக்ஷித், 32; என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.