/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கை லாசநாதர் கோவிலில் ருத்ர ஹோமம் நடந்தது
/
கை லாசநாதர் கோவிலில் ருத்ர ஹோமம் நடந்தது
ADDED : மே 21, 2024 05:04 AM

காரைக்கால்: காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடந்தது.
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் 25ம் ஆண்டு அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து அபிஷேகம் நடந்தது.
காலை 7:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை சங்கல்பம், 8:00 மணிக்கு ஏகாதச ருத்ரகலச பூஜைகள் நடந்தது. 9:00 மணிக்கு ஏகாதச ருத்ர பாராயணம், 10மணிக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் நடந்தது.11மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாரதனையும், 12மணிக்கு மகா ஸ்தபன அபிஷேக மகா தீபராதனை, மாலை 4:30 மணிக்கு பிரதேஷ வழிபாடு, திரிசதி அர்ச்சனை, இரவு கைலாசநாதர் சுந்தராம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு அர்த்தஜாம பள்ளியறை வழிபாடு,சண்டிகேஸ்வரர் கால பைரவர் வழிபாடு நடந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன்.தனி அதிகாரி காளிதாசன் ஆகியோர் தலைமையிலான அறங்காவல் வாரியத்தினர் செய்திருந்தனர்.

