/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊரக வேலை உறுதி திட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம்
/
ஊரக வேலை உறுதி திட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம்
ADDED : மார் 06, 2025 04:38 AM

புதுச்சேரி: மூன்று மாத சம்பளத்தை வழங்கக்கோரி, தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட ஊழியர்கள் சங்கத்தினர் (நரேகா), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் முன்பு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (நரேகா) கீழ் கடந்த 2009 ம் ஆண்டு முதல் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றும் தங்களை, ஊரக வளர்ச்சித்துறை காலி பணியிடங்களில் தங்களை பணி அமர்த்த வேண்டும், மூன்று மாத கால ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட ஊழியர்கள் சங்கத்தினர், புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் முன்பு, நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சங்க தலைவர் வேலுமணி, செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினர்.