/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை
/
கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை
ADDED : மார் 31, 2024 04:44 AM
காட்டேரிக்குப்பம், : அமட்டன்குளம் இருளர் குடியிருப்பு பகுதியில் கணவர் இறந்த ஒரு மாதத்திற்குள் மனைவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமராப்பாளையம் அடுத்த அமட்டன்குளம் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி கஸ்துாரி, 19. இவரது கணவர் ராஜேஷ் கடந்த மாதம், குடும்ப பிரச்னை காரணமாக துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால், கஸ்துாரி தனது உறவினர் வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். கணவர் இறந்ததால் மனமுடைந்து காணப்பட்ட கஸ்துாரி கடந்த 24ம் தேதி வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அருகில் இருந்தவர்கள் கஸ்துாரியை மீட்டு, கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

