/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வன்னிய பெருமாள் கோவிலில் ஸம்வத்ஸர அபிஷேகம்
/
வன்னிய பெருமாள் கோவிலில் ஸம்வத்ஸர அபிஷேகம்
ADDED : ஏப் 27, 2024 04:35 AM

புதுச்சேரி: கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு, வன்னிய பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நேற்று நடந்தது.
முதலியார்பேட்டையில் வன்னிய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று மாலை 6:30 மணிக்கு, வன்னிய பெருமாளுக்கு ஸம்வத்ஸராபிஷேகம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் கவுரவத் தலைவர் சம்பத் எம்.எல்.ஏ., நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன், உபயதாரர் வனஜா கன்னியப்பன் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்து 16 ஆண்டுகளாகி விட்டது. எனவே, புதிதாக கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான பாலாயனம் அடுத்த மாதத்தில் நடத்தப்பட உள்ளது.

