/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 15, 2024 12:57 AM

வில்லியனுார் : வில்லியனுார் மேலாண்ட வீதியில்உள்ள ஸ்ரீ சங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து 26ம் ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
மாணவி மோனிஷா 485 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவி சபர்மதி 484 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், மாணவி ஜனனி 482 மதிப்பெண்கள் பெற்ற மூன்றாம் இடம் பிடித்தனர்.
மாணவர்கள் தனுஷ்ஸ்ரீ -479, கிரிதரன்- 478, மோகன்ராம்- 478, ஸ்ரீபிரகலாத்-478, சுந்தரேஸ்வரர்- 477 மதிப்பெண்கள் எடுத்தனர்.
பள்ளியில் பாடவாரியாக தமிழில் 2 மாணவர்கள் - 97 மதிப்பெண், ஆங்கிலத்தில் 3 பேர் - 97, கணிதத்தில் 7 பேர் 100க்கு 100, அறிவியலில் 3 பேர் - 98, சமூக அறிவியலில் ஒரு மாணவி 100க்கு ௧௦௦ மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 21 பேர், 470க்கு மேல் 12 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அவர்களை பள்ளி கல்வி குழுமத்தின் தலைவர் சத்தியகுமாரி கோவிந்தராஜன், நிர்வாகி விஜய லட்சுமி ஆகியோர் பாராட்டினர்.
பள்ளி முதல்வர் சுகந்தி, துணை முதல்வர் அஸ்வினி, பெற்றோர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சரவணன், மேலாளர் சுந்தரகணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

