ADDED : ஆக 26, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற இயக்கத்தின் கீழ், பாகூர் மேற்கு கிராம பஞ்சாயத்து பொது சேவை மையம் சார்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
உலக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிரதமர் மோடி 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற மரம் நடும் இயக்கத்தை துவங்கி வைத்தார்.
மத்திய அரசின் தேசிய மின்ணுவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொது சேவை மையம் மூலம் நாடு முழுதும் மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, பாகூர் மேற்கு கிராம பஞ்சாயத்து பொது சேவை மையம் சார்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
பாகூர் துணை தாசில்தார் நாகராஜ் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.
கிராமப்புற தொழில் முனைவோர் பாலமுருகன் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.