ADDED : ஜூலை 10, 2024 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார், : விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளியில் வன பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
வில்லியனுார் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் வன பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் ரவி தலைமை தாங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். ஆங்கில விரிவுரையாளர் ராஜேஷ் மரம் வளர்ப்பு முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து பேசினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்ட அலுவலர் வீரபத்திரன், மரங்களினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் வேல்முருகன் மற்றும் இறைவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.