ADDED : ஜூலை 11, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள் தலைமை தாங்கினார்.
வேளாண்துறை இணை இயக்குநர் பிரபா, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார், விரிவுரையாளர் மதிவாணன் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர்.
'மரம் வளர்ப்போம், மண்வளம் காப்போம்' என்ற தலைப்பில் மாணவர்கள் இடையே கலந்துரையாடல் நடந்தது.
பின், வனத்துறையினருடன் இணைந்து ஆசிரியர்கள், மாணவர்கள் மூலம் பள்ளி வளாகம் முழுதும் 55 மரக்கன்றுகள் நடப்பட்டன.