ADDED : ஜூன் 22, 2024 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : மாதவச்சேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்றவர் நேற்று போலீசில் சரணடைந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்து மகன் ராமர்,36; இவர் அதே கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்.
கடந்த 18ம் தேதி இவர் விற்ற சாராயத்தை வாங்கி குடித்தவர்களில் 20க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அதனைத் தொடர்ந்து தலைமறைவான ராமரை போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் அவர் நேற்று காலை கச்சிராயபாளையம் போலீசில் சரணடைந்தார். அவரிடம் செங்கம் டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் கள்ளச்சாராயத்தை சப்ளை செய்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.