/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சத்யா சிறப்பு பள்ளி மாணவர்கள் இரவு வான் நோக்கு நிகழ்வு
/
சத்யா சிறப்பு பள்ளி மாணவர்கள் இரவு வான் நோக்கு நிகழ்வு
சத்யா சிறப்பு பள்ளி மாணவர்கள் இரவு வான் நோக்கு நிகழ்வு
சத்யா சிறப்பு பள்ளி மாணவர்கள் இரவு வான் நோக்கு நிகழ்வு
ADDED : ஏப் 02, 2024 04:12 AM

புதுச்சேரி : புதுச்சேரி அறிவியல் இயக்கம், பாகூர், சேலியமேடு சத்யா சிறப்பு பள்ளி சார்பில் இரவு வான் நோக்கு நிகழ்வு நடந்தது.
இரவு வான் போக்கு நிகழ்வு குறித்து ஒருங்கிணைப்பாளரும், அறிவியல் இயக்க துணைத் தலைவருமான ஹேமாவதி விளக்கினார். பாகூர், குருவிநத்தம், நிர்ணயப்பட்டு, சேலியமேடு பகுதி அறிவியல் இயக்கத்தின் சமம் சுயசார்பு இயக்கத்தினர், சத்யா சிறப்பு பள்ளியின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தொலைநோக்கியின் மூலம் பூமி குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் கோளையும், அதன் மூன்று நிலாக்களையும் அனைவரும் கண்டு களித்தனர்.
பின்னர், சூரிய குடும்பம், நட்சத்திர மண்டலங்கள் குறித்து புதுச்சேரி அறிவியல் இயக்க தலைவரும், பாரதிதாசன் மகளிர் கல்லுாரி இயற்பியல் துறை தலைவருமான மதிவாணன், நழுவுப்பட காட்சியின் மூலம் விளக்கினார்.
ஏற்பாடுகளை சத்யா சிறப்பு பள்ளி பொறுப்பாசிரியர் அஸ்வினி, ஆசிரிய, ஆசிரியர்கள், உதவியாளர்கள் செய்திருந்தனர். இதில், சேலியமேடு செயல்பாட்டாளர் சிவானந்தம், அறிவியல் இயக்க செயலர் முருகவேல், பொருளாளர் ரமேஷ், சமம் சுய சார்பு இயக்க பொறுப்பாளர்கள் சந்திரவதனி, இந்திரா, பரிமளா, சிவகாமி, ஐயம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

