/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.ஏ.எஸ்., தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை: அங்காளன் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு

ADDED : ஜூலை 23, 2024 02:20 AM

புதுச்சேரி : ஐ.ஏ.எஸ்., தேர்விற்கு தயாராகும் புதுச்சேரி மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் உதவித்தொகை வழங்கவேண்டும் என அங்காளன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் குடிமைபொருள் வழங்கல் துறை செயலர் முத்தம்மாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் மத்திய அரசின் குடிமைப் பணிக்கான தேர்வில் பங்கேற்கின்றனர்.
இந்த தேர்வானது மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. அவற்றில் முதல் நிலை தேர்வில் வெற்றிபெற்று மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வான முதன்மை தேர்விற்கு தங்களை தயார் செய்யும்போது அதற்கு நிறைய புத்தகங்கள் மற்றும் பயிற்சி மையங்களில் சேர்ந்து தங்களை தேர்விற்கு தயார் செய்கிறார்கள்.
இதனால் ஏழை, எளிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகையால் முதன்மை தேர்விற்கு தயாராகும் மாணவர்களின் பொருளாதார சிரமங்களை போக்கும் வகையில், மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ.30 ஆயிரம் உதவித்தொகையும் மற்றும் மூன்றாம் நிலை தேர்வான நேர்காணலில் தலைநகர் டில்லியில் உள்ள மத்திய குடிமைப்பணி அலுவலகத்திற்கு சென்று வருவதற்கான அனைத்து செலவுகளையும், புதுச்சேரி அரசு வழங்கி, நமது மாநிலத்தில் இருந்து பல மத்திய அதிகாரிகளை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.