ADDED : மார் 22, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மடுகரை வெங்கட சுப்பா ரெட்டியார் அரசு பள்ளி மாணவர்கள் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற வாசங்களுடன் களப் பயணம் சென்றனர்.
பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவர்கள் புதுச்சேரியில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு ஒரு நாள் களப் பயணமாக சென்றனர். நிகழ்ச்சியை பள்ளி துணை முதல்வர் சிவக்குமார், தலைமை ஆசிரியை வசந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாணவர்கள், கலெக்டர் அலுவலகம், அறிவியல் மையம், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஆசிரியர் முகமது ஜாகீர், சந்தான கிருஷ்ணன், உதவியாளர் மோகன்ராஜ், ராஜவதனி, மங்கலட்சுமி, சுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

