UPDATED : ஜூலை 21, 2026 04:40 PM
ADDED : ஜூலை 21, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பாரதி பூங்கா அருகே நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருடு போனது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வளவனுார் குமாரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தெய்வநாயகம் மகன் குபேந்திரன்,55; சேதராப்பட்டில், உள்ள தனியார் கம்பெனியில் அக்கவுண்டன்ட். இவர் தனது திருமண நாளையொட்டி, கடந்த மாதம் 27ம் தேதி புதுச்சேரி, பாரதி பூங்கா அருகே தனது ஆக்டிவா ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, கடற்கரைக்கு சென்றார். பின் சிறிது நேரம் கழித்துப் பார்த்த போது, அங்கு நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை காணவில்லை.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
