/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அலற விடும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டும்
/
அலற விடும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டும்
ADDED : ஆக 14, 2024 06:05 AM
நாடு முழுவதும் ஏர் ஹாரன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறி ஏர் ஹாரன்களை பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் சட்ட விரோதமாக பயன்படுத்துகின்றனர்.
பெரும்பாலான பஸ்களில், மனிதர்களின் கேட்கும் திறனை தாண்டி, காட்டுக்கூச்சல் எழுப்பும் ஏர் ஹாரன்களை அலற விடுகின்றனர். காதை கிழிக்கும் ஏர் ஹாரன்கள், கேட்கும் திறனை பாதிப்படைய செய்வதோடு, பீதியையும் ஏற்படுத்துகிறது. திடீரென பின்னால் ஒலிக்கும் ஏர் ஹாரன் சத்தத்தை கேட்டு டூ வீலர், சைக்கிள்களில் செல்பவர்கள் பயந்து கீழே விழுந்து காயமடைவது தொடர் கதையாக உள்ளது.
மேலும், பள்ளிகள் அருகிலும், மருத்துவமனைகள் அருகிலும் ஏர் ஹாரனை பயன்படுத்துவதால் மாணவர்களும், நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஏர் ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்வதுடன், வழக்கு பதிவு செய்தும் அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.