/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட கடலுார் பெண் உடல் அடக்கம்
/
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட கடலுார் பெண் உடல் அடக்கம்
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட கடலுார் பெண் உடல் அடக்கம்
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட கடலுார் பெண் உடல் அடக்கம்
ADDED : செப் 01, 2024 04:27 AM
புதுச்சேரி : அமெரிக்காவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கடலுாரைச் சேர்ந்த சவுமியாவின் உடல் அங்கேயே நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 39. இவருக்கும் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சவுமியா என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின், அமெரிக்காவில் வசித்து வந்த இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 20ம் தேதி சவுமியாவை பாலசுப்ரமணியன் துப்பாக்கால் சுட்டு கொன்றுவிட்டு, அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவர்களது உடலை புதுச்சேரிக்கு கொண்டு வர பெற்றோர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சவுமியாவின் உடல் நேற்று அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பாலசுப்ரமணியன் உடலை விமான மூலம் புதுச்சேரி கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளையும் அமெரிக்காவிலேயே வசித்து வரும் பாலசுப்ரமணியனின் முதல் மனைவி தத்தெடுத்து வளர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.