/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர் ஆதரவாளர் வீட்டில் சோதனை
/
அமைச்சர் ஆதரவாளர் வீட்டில் சோதனை
ADDED : ஏப் 17, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுார் அமைச்சரின் ஆதரவாளர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
வில்லியனுார் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, முதல்வர் ரங்கசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 10:00 மணிக்கு மேல் அமைச்சரின் தீவிர ஆதரவாளர், வில்லியனுார் தில்லை நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் வீட்டில் சப் கலெக்டர் சோமசுந்தர அப்பாபு கொட்டாரு மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.

