ADDED : மார் 25, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் முத்துகுமாரசாமி கோவிலில் 52ம் ஆண்டுபங்குனி உத்திர விழாவையொட்டி நேற்று பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, கடந்த 15ம் தேதி துவங்கியது.நேற்று சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு சுவுாமி வீதியுலா நடந்தது.
நாளை இரவு 108 சங்கு அபிேஷகம், நாளை மறுநாள் சந்தனகாப்பு மற்றும் இடும்பன் பூஜை, 31ம் தேதி சாந்தி பூஜை நடக்கிறது.

