/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனிக்குப்பம் கோவிலில் நாளை செடல் உற்சவம்
/
தனிக்குப்பம் கோவிலில் நாளை செடல் உற்சவம்
ADDED : மே 12, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: தனிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் 2ம் ஆண்டு செடல் உற்சவம் நாளை நடக்கிறது.
ஏம்பலம் அடுத்த தனிக்குப்பம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், நாகாத்தம்மன் கோவிலில் 2ம் ஆண்டு செடல் திருவிழா நாளை 13ம் தேதி மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.
விழாவை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு ஊரல் குளக்கரையில் கரகம் அலங்கரித்து ஊர்வலம் வருதல், மதியம் 2:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 6:00 மணிக்கு கும்பம் படைத்தல், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.
ஏற்பாடுகளை தனிக்குப்பம் கிராம மக்கள் செய்துள்ளனர்.