sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொழிலதிபர் மகன் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து: 'பிளேட்'டை மாற்றுகிறார் வழக்கறிஞர்

/

தொழிலதிபர் மகன் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து: 'பிளேட்'டை மாற்றுகிறார் வழக்கறிஞர்

தொழிலதிபர் மகன் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து: 'பிளேட்'டை மாற்றுகிறார் வழக்கறிஞர்

தொழிலதிபர் மகன் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து: 'பிளேட்'டை மாற்றுகிறார் வழக்கறிஞர்

7


UPDATED : பிப் 11, 2026 12:39 AM

ADDED : பிப் 11, 2026 12:31 AM

Google News

7

UPDATED : பிப் 11, 2026 12:39 AM ADDED : பிப் 11, 2026 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கான்பூர்: உத்தர பிரதேசத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான, 'லம்போர்கினி' சொகுசு கார், பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில், 'காரை புகையிலை அதிபரின் மகன் ஷிவம் மிஸ்ரா ஓட்டவில்லை' என, அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

விசாரணை


உ.பி., கான்பூரின் வி.ஐ.பி., சாலையில் உள்ள வணிக வளாகம் அரு கே நேற்று முன்தினம் மாலை 3:15 மணிக்கு அதிவே கமாக வந்த லம்போர்கினி சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்ட வா கனங்கள் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில், ஆறு பேர் படு காயம் அடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் டில்லியைச் சேர்ந்த பிரபல புகையிலை அதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா என்பது தெரிய வந்தது.

குடிபோதையில், அதிவேகமாக அவர் கார் ஓட்டி வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, ஷிவம் மிஸ்ரா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரது சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆதாரங்கள்


இது குறித்து ஷிவம் மிஸ்ராவின் வழக்கறிஞர் மிருத்யூஞ்சய குமார் கூறும்போது, ''லம்போர்கினி காரை ஷிவம் மிஸ்ரா ஓட்டிச் செல்லவில்லை. டிரைவர் தான் காரை ஓட்டிச் சென்றார். அதற்கான ஆதாரங்களை நாங்கள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்,'' என்றார்.

கான்பூர் போலீஸ் கமிஷனர் ரகுவீர் லால் கூறுகையில், ''ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள், நேரில் பார்த்த சாட்சியங்கள் அனைத்தும் ஷிவம் மிஸ்ரா தான் காரை ஓட்டினார் என்பதை உறுதி படுத்துகின்றன. வழக்கறிஞர் சொல்வதில் உண்மை இல்லை. ''மேலும், வழக்கறிஞரின் வாத திறமை எங்களது விசாரணைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நீதிமன்றத்தில் உண்மைகள் அனைத்தையும் தாக்கல் செய்வோம்,'' என்றார்.

காரை சோதிக்கவே டிரைவருடன் பயணம்


லம்போர்கினி விபத்து தொடர்பாக புகையிலை அதிபர் கே.கே.மிஸ்ரா கூறியதாவது: லம்போர்கினி கார் விபத்தில் சிக்கியபோது என் மகன் கார் உள்ளே தான் அமர்ந்திருந்தார். ஆனால், காரை அவர் ஓட்டவில்லை. டிரைவர் தான் ஓட்டிச் சென்றார். விபத்துக்குள்ளானதும், என் மகன் உடனடியாக மயக்கம் அடைந்து விட்டார். அதனால், பின்னால் சென்ற பாதுகாவலர்கள், டிரைவர் பக்கத்தில் இருந்த கதவை உடைத்து திறந்து, உள்ளே இருந்த அவரை மீட்டனர். டில்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கார் நன்றாக ஓடுகிறதா என்பதை சோதித்து பார்க்கவே, டிரைவருடன் என் மகன் சென்றார். இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை. விசாரணைக்கு அழைக்கும்போது நிச்சயம் ஆஜராவோம். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us