/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மயில் வடிவ கார்னரில் 'செல்பி' வாக்காளர்களுக்கு அழைப்பு
/
மயில் வடிவ கார்னரில் 'செல்பி' வாக்காளர்களுக்கு அழைப்பு
மயில் வடிவ கார்னரில் 'செல்பி' வாக்காளர்களுக்கு அழைப்பு
மயில் வடிவ கார்னரில் 'செல்பி' வாக்காளர்களுக்கு அழைப்பு
ADDED : மார் 31, 2024 04:56 AM

புதுச்சேரி, : புதுச்சேரி கடற்கரை சாலையில் வடிவமைக்கப்பட்டுள்ள அழகிய மயில் வடிவ கார்னரில், 'செல்பி' எடுத்து கொள்ள, தேர்தல் துறை வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
புதுச்சேரி கடற்கரை சாலை, லே கபே அருகில், 'ஸ்வீப்' திட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலகம், அழகிய மயில் வடிவ 'செல்பி கார்னரை' அமைத்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.
இதனால், பாக்கு மட்டை கழிவு, மந்தார இலை, ஈச்சம் மரக்கழிவு, காய்ந்த மட்டை, பூக்கள், மரப்பட்டை மற்றும் துடைப்பம் ஆகியவற்றை கொண்டு, தேசிய சின்னமான மயில், வடிவமைக்கப்பட்டு, அதன் கீழ் 'எனது வாக்கு விற்பனைக்கு அல்ல' என்ற வாசகத்துடன், செல்பி கார்னர் நிறுவப்பட்டுள்ளது.
அங்கு, முதல் முதலாக உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சோமசேகர் அப்பாராவ் கொட்டாரு, செல்பி எடுத்து கொண்டார். இந்த 'கார்னர்' இன்று மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை இருக்கும். கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் 'செல்பி' எடுத்து வாக்காளர் விழிப்புணர்வில் பங்கு கொள்ள, மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு மேற்கொண்டது.

