/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி, விழுப்புரம், கடலுாரில் மருத்துவ படிப்பு குறித்த கருத்தரங்கு
/
புதுச்சேரி, விழுப்புரம், கடலுாரில் மருத்துவ படிப்பு குறித்த கருத்தரங்கு
புதுச்சேரி, விழுப்புரம், கடலுாரில் மருத்துவ படிப்பு குறித்த கருத்தரங்கு
புதுச்சேரி, விழுப்புரம், கடலுாரில் மருத்துவ படிப்பு குறித்த கருத்தரங்கு
ADDED : ஜூலை 06, 2024 04:17 AM
புதுச்சேரி: லிம்ரா ஓவர்சீஸ் எஜூகேஷன் நிறுவனம் சார்பில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவம் பயில்வது குறித்த இலவச கருத்தரங்கம் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலுாரில் நடக்கிறது.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தமிழகம் மற்றும் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது குறித்த வழிகாட்டி கருத்தரங்கு லிம்ரா ஓவர்சீஸ் எஜூகேஷன் நிறுவனம் சார்பில் நடக்கிறது.
இன்று 6ம் தேதி, மாலை 5:30 மணிக்கு, விழுப்புரம் மகாலட்சுமி பிளாசாவில் நடக்கிறது. நாளை 7ம் தேதி, கடலுார் பாரதி ரோடு, மஞ்சக்குப்பம் ஆர்க்காடு உட்லன்சிலும், அன்று மாலை 4:30 மணிக்கு புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள அண்ணாமலை ஓட்டலில் நடக்கிறது.
லிம்ரா ஓவர்சீஸ் நிறுவன இயக்குநர் கூறுகையில், 'வெளிநாட்டில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் குறித்து லிம்ரா ஓவர்சீஸ் நிறுவனம் வழிகாட்டி வருகிறது. இதுவரை 1,750 பேர் வெளிநாட்டு மற்றும் தமிழக மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவம் பயில வைத்துள்ளது.
இந்நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான லைம் பயிற்சி மையம் 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு எப்.எம்.ஜி.இ., பயிற்சி அளித்து வருவதுடன், கடந்த ஆண்டு எப்.எம்.ஜி.இ., தேர்வில் 81 சதவீதம் மேல் தேர்ச்சி பெற்றுள்ளது.
என்.எம்.சி., விதிமுறைகள்படி, எந்த நாட்டில் மருத்துவம் படிக்கலாம் என்ற குழப்பம் உள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்கு இந்த கருத்தரங்கம் வழிகாட்டும். நீட் தேர்வில் 129 மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தோல்வியுற்ற மாணவர்கள் கூட பங்கேற்கலாம்' என்றார்.
மேலும் விவரங்களுக்கு 94457 83333, 99529 22333 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.