/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் சேர்க்கை கலந்துரையாடல்
/
சென்டாக் சேர்க்கை கலந்துரையாடல்
ADDED : மே 20, 2024 04:34 AM
புதுச்சேரி : சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பாக இணையம் வழியாக மாணவர்கள், பெற்றோர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரியில் உயர் கல்வி சேர்க்கையான சென்டாக் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத படிப்புகளுக்கு கடந்த 8 ம்தேதி ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகித்து வருகின்றது.போட்டி போட்டுக்கொண்டு மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். சென்டாக் கவுன்சிலிங், மாணவர் சேர்க்கை நடைமுறைகள் குறித்து நேற்று இணையம் வழியாக கலந்துரை யாடல் நேற்று நடந்தது. உயர் கல்வித் துறை இயக்குனர் அமன் சர்மா துவக்கி வைத்தார். தொடர்ந்து கலந்துரையாடல் நடந்தது.
கூகுள் மீட்டில் இணைந்த மாணவர்கள், பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு சென்டாக் அதிகாரிகள், கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர். உயர் கல்வி துறையின் கீழ் உள்ள கல்லுாரிகள், ஒவ்வொரு கல்லுாரியில் உள்ள படிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

