/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் உயர்கல்வி சேர்க்கை ஆயத்த பணிகள் துவங்கியது: அடுத்த மாதம் விண்ணப்பம் விநியோகிக்க முடிவு
/
சென்டாக் உயர்கல்வி சேர்க்கை ஆயத்த பணிகள் துவங்கியது: அடுத்த மாதம் விண்ணப்பம் விநியோகிக்க முடிவு
சென்டாக் உயர்கல்வி சேர்க்கை ஆயத்த பணிகள் துவங்கியது: அடுத்த மாதம் விண்ணப்பம் விநியோகிக்க முடிவு
சென்டாக் உயர்கல்வி சேர்க்கை ஆயத்த பணிகள் துவங்கியது: அடுத்த மாதம் விண்ணப்பம் விநியோகிக்க முடிவு
UPDATED : ஏப் 25, 2024 04:10 AM
ADDED : ஏப் 25, 2024 03:31 AM

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லுாரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, சென்டாக் மூலம் ஒருங்கிணைந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
விண்ணப்பம் வினியோகம், கவுன்சிலிங் ஆகியவை ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக உள்ள சூழ்நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் உயர் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் எப்போது வினியோகிக்கப்படும் என, மாணவர் மற்றும் பெற்றோர் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால், புதுச்சேரியில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் வகையில் புதிய சென்டாக் கமிட்டிக்கான அறிவிப்பே இன்னும் வெளியாகவில்லை.
இது குறித்து உயர் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, புதுச்சேரி மாநிலத்தில் இந்த முறை மாணவர் சேர்க்கைகான நடைமுறைகள் முன்பே திட்டமிட்டு துவங்கிவிட்டோம்.
கடந்த காலங்களில் கிடைத்த சில அனுபவங்களை வைத்து மாணவர் சேர்க்கை நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.ஆன்-லைன் விண்ணப்பம் விநியோகம்,தகவல் குறிப்பேடு உள்ளிட்ட அனைத்தும் ரெடியாகவே உள்ளது. சென்டாக்கிற்கு புதிய கமிட்டி அமைக்க கோப்பும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.புதிய கமிட்டி குறித்த அறிவிப்பு வெளியானதும்,அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நீட் அல்லாத படிப்புகளுக்கும் மட்டும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் துவங்கிவிடும் என்றனர்.
நீட் படிப்புகள்
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் தமிழ்நாடு கல்வி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
மாகி பிராந்தியத்தில் கேரளா மாநில பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திரா மாநில பாடத்திட்டமும் பின்பற்றப் படுகிறது.தமிழ்நாடு பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மட்டுமே தற்போது பிளஸ்2 ரிசல்ட் மே-6 ம்தேதி வெளியாக உள்ளது.
கேரளா மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் மாகி, ஆந்திரா மாநில கல்வி திட்டத்தை பின்பற்றும் ஏனாம் பிராந்தியத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை.அதேபோல, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ரிசல்ட் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இதனால், சென்டாக் உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தாயாராக இருந்தும், கூட, இந்த பிராந்திய மாணவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் அவர்களுக்கும் ரிசல்ட் வந்த பிறகே எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ்.,உள்ளிட்ட நீட் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்லைனில் விநியோகம் செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வளவு இடங்கள் உள்ளன.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட தொழில் படிப்புகளில் 5,464 இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளன. இது மட்டுமின்றி, கலை, அறிவியல் கல்லுாரிகளில் 4,260 இடங்கள், நுண்கலை படிப்புகளில் 90 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.
லேட்ரல் என்ட்ரி இன்ஜினியரிங் படிப்பில் 426, உயிரியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகளில் 175 இடங்களும் சென்டாக் வாயிலாக நிரப்பப்படுகிறது. மொத்தம் 10,415 இடங்கள் சென்டாக் மூலம் ஆண்டுதோறும் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடதக்கது.

