/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு
/
செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு
செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு
செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 17, 2024 02:50 AM

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தை கவர்னர், முதல்வர் வடம் பிடித்து இழுந்து துவக்கி வைத்தனர்.
அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிரெஞ்சு காலத்தில் இருந்தே தேரோட்டத்தை கவர்னர் துவக்கி வைக்கும் நிகழ்வு இன்று வரை தொடர்கிறது. தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை விநாயகர், செங்கழுநீர் அம்மன் உச்சவர் சுவாமிகள் தேரில், அமர்த்தப்பட்டனர். பூசணிகாய் உடைத்து, தேர் சக்கரத்தில் எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜை செய்து திருஷ்டி கழிக்கப்பட்டது.
தொடர்ந்து, கவர்னர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் காலை 8:00 மணியளவில், தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை துவக்கி வைத்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில், மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்றனர். புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ், மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போக்குவரத்து போலீசார் செய்திருந்தனர்.
நேற்று மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், பா.ஜ., மாநில தொழில் பிரிவு தலைவர் செல்வகுமார், தி.மு.க, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில அமைப்பாளர் சங்கர் (எ) சிவசங்கரன், இளைஞர் காங்., மாநில தலைவர் அனந்தபாபு நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

