/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு தேடி மருத்துவ திட்டம் அமல்படுத்த வேண்டும் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேச்சு
/
வீடு தேடி மருத்துவ திட்டம் அமல்படுத்த வேண்டும் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேச்சு
வீடு தேடி மருத்துவ திட்டம் அமல்படுத்த வேண்டும் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேச்சு
வீடு தேடி மருத்துவ திட்டம் அமல்படுத்த வேண்டும் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேச்சு
ADDED : ஆக 08, 2024 02:14 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் வீடு தேடி மருத்துவம் திட்டத்தை துவக்க வேண்டும் என செந்தில்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, அவர், பேசியதாவது;
நான்கு வழிச்சாலை பணிக்காக எடுக்கப்படும் நிலத்திற்கு, ஒரே விதமான இழப்பீடு தொகை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மல்டிபல் முறையில் இழப்பீடு வழங்குகின்றனர். எதிர்காலத்தில் தமிழத்தை பின்பற்றி இழப்பீடு வழங்க பரிசீலிக்க வேண்டும். அரிக்கன்மேடு மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களை புனரமைக்க, கூடுதல் நிதி அளிக்க வேண்டும். ஐ.டி., பூங்கா கொள்கையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அத்துறை மூலம் வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய பரிசீலிக்க வேண்டும்.
குடிசை மாற்று வாரியம் மூலம் 5ம் கட்டமாக கல்வீடு கட்டமானியம் வழங்கும் திட்டத்தில் பெற்ற பத்திரங்கள் பல்வேறு காரணங்கள் கூறி வழங்கப்படாமல் கிடப்பில் உள்ளது.
அதனை சரிசெய்து ஒப்படைக்கவேண்டும். தமிழகத்தில் உள்ளதுபோல், வீடு தேடி மருத்துவம் என்பதுபோல் புதுச்சேரியில் திட்டத்தை துவக்கி, சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொடர் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று மருந்து வழங்கலாம்.
அரசு துறையில் 10 ஆண்டிற்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை ஒரு முறை தளர்வு அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்றார்.