தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செங்கழுநீர் அம்மன் கோவிலில் செடல் உற்சவம்

செங்கழுநீர் அம்மன் கோவிலில் செடல் உற்சவம்

செங்கழுநீர் அம்மன் கோவிலில் செடல் உற்சவம்


ADDED : ஜூலை 21, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 07:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வாழைக்குளம் அப்பாவு நகர் பகுதியில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் 98 ம் ஆண்டு செடல் உற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. 

இதையொட்டி மாலை 6.00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இரவு 7.00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து இரவு சுவாமி வீதியுலா நடந்தது. இன்று முதல் வரும் 26ம் தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 24ம் தேதி மதியம் 1.00 மணிக்கு செடல் வைபவமும், மாலை 4.30 மணிக்கு ரத உற்சவம் நடக்கிறது. 25ம் தேதி இரவு 1.00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. 26ம் தேதி மாலை 6 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us