/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதா கங்காதரன் கல்லுாரி ஆண்டு விழா
/
சாரதா கங்காதரன் கல்லுாரி ஆண்டு விழா
ADDED : மே 18, 2024 06:31 AM
புதுச்சேரி: சாரதா கங்காதரன் கல்லுாரியில் 23வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் ஜான் ஜேக்கப் வரவேற்றார். கல்லுாரி துணைத் தலைவர் பழனிராஜா வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் பாபு ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில், புதுச்சேரி பல்கலைக்கழக கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குனர் கிளமெண்ட் சகாயராஜா லுார்து, மாணவர்கள் பயத்தையும் தயக்கத்தையும் எவ்வாறு கையாள்வது. எப்படி தங்களது படைப்பாற்றலை மேம்படுத்த வேண்டும். ஆங்கில பேச்சுத் திறமையின் முக்கியத்துவம் குறித்தும் அதனை வளர்த்து கொள்ளும் முறைகள் குறித்தும் பேசினார்.
விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், மற்றும் பிரெஞ்சு ஆகியவற்றில் கவிதை போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவின் 2023--24ம் கல்வி ஆண்டுக்கான கல்வியில் முதலிடம் பெற்ற, கணிதவியல் மூன்றாம் ஆண்டு மாணவி ரோஷினிக்கும், விளையாட்டில் முதலிடம் பெற்ற முதுகலை ஆங்கிலத் துறை மாணவர் பீட்டர் ஆனந்திற்கும், அனைத்திலும் சிறந்து விளங்கிய இளங்கலை மேலாண் துறை மாணவி ஸ்ரீதேவிக்கும் விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இளங்கலை கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் சவிதா நன்றி கூறினார்.

