/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
/
என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
ADDED : ஜூன் 27, 2024 02:44 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை என்.சி.சி., விமானப்படை பிரிவு முகாமில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தது.
புதுச்சேரி என்.சி.சி., விமானப்படை பிரிவு சார்பில், வருடாந்திர 10 நாள் பயிற்சி முகாம், லாஸ்பேட்டை என்.சி.சி., பயிற்சி வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
முகாமில் பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, புதுச்சேரி பல்கலைக் கழகம், சமுதாய கல்லுாரி, ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி, அபிேஷகப்பாக்கம், உருவையாறு பள்ளி மாணவர்கள் 302 பேர் பங்கேற்றனர்.
விங் கமாண்டர் ரஞ்சித் ஜனார்த்தனன் தொடக்க உரையாற்றினார். முகாமில் தீ ஆயுதங்கள் கையாளுதல், ஏரோ மாடலிங், துப்பாக்கி சுடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதி, சுகாதாரம், தீ பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்புரையாற்ற உள்ளனர்.
முகாமில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தது. முகாம் வரும் 4ம் தேதியுடன் நிறைவடைகிறது.